
பீஹார் மாநிலம் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள ஜரோகர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட கார்ஸால்வா கிராமம் நேபாளத்துடனான எல்லையில் அமைந்துள்ளது.
இன்று இந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கையில் சில மீட்டர்கள் எல்லை தாண்டியுள்ளனர்.
இந்த நிலையில் நேபாள ஆயுத காவல்துறையினர் அங்கு வந்துள்ளனர், அப்போது இருதரப்புக்கும் கடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து நேபாள வீரர்கள் கிராம மக்களை கடுமையாக தாக்கி உள்ளனர், இதனையடுத்து இந்திய நேபாள எல்லையில் பதற்றம் அதிகரித்து உள்ளது.