இந்திய விமானப்படை மற்றும் கடற்படைக்காக 248 அஸ்திரா மார்க் 1 பிவிஆர் ஏவுகணைகளை வாங்க சில நாட்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.100-110கிமீ தொலைவில் உள்ள விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை இந்த அஸ்திரா ஏவுகணைகள்.
தற்போது சுகாய் விமானத்தில் இருந்து பலமுறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.விரைவில் மிக்-29 மற்றும் தேஜஸ் விமானங்களில் இந்த ஏவுகணை இணைக்கப்பட உள்ளது.
தற்போது அதிக தூரம் செல்லக்கூடிய அஸ்திரா மார்க்2 ஏவுகணையை டிஆர்டிஓ மேம்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த புதிய அஸ்திரா ஏவுகணை சீனாவின் PL-15 மற்றும் அமெரிக்காவின் AIM-120D ஏவுகணைகளின் திறனுக்கு இணையானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.இதன் ஏவு தூரம் கிட்டத்தட்ட 160-180கிமீ ஆக இருக்கும் என கூறப்படுகிறது.