இந்திய ராணுவம் மற்ற நாடுகளுடன் நடத்திய போர்பயிற்சிகள் லிஸ்ட்

இந்திய இராணுவம் பல்வேறு உலக சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு பல்வேறு உலக நாடுகளுடன் வருடந்தோறும் அல்லது சில முறைகள் போர்பயிற்சிகள் செய்கிறது.இந்த போர்பயிற்சிகள் இந்திய இராணுவத்திற்கும் அதே போல இந்தியாவுடன் பயிற்சி மேற்கொள்ளும் நாட்டிற்கும் பேருதவியாக இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட எதிரிக்கு எதிராக போர் சமயங்களில் ஒருகிணைந்து செயல்பட,ஒரு புரிதலுக்காக,புது உறவுக்காக அல்லது உறவு மேம்படுத்த மற்றும் ஐநா பாதுகாப்பு பணிகளில் மற்ற நாடுகளுடன் வெளிநாடுகளில் இணைந்து செயல்பட என இந்த போர்பயிற்சிகள் உதவும்..

அப்படி இந்தியா மேற்கொள்ளும் சில போர்பயிற்சிகள் குறித்து பார்க்கலாம்..இந்த பக்கத்தை நீங்கள் புக்மார்க் செய்து வைத்து கொள்ளுங்கள்.இவை போட்டித்தேர்வுகளுக்கும் உதவும்.

1) யுத் அப்யாஸ்

இந்தியா அமெரிக்கா இணைந்து மேற்காள்ளும் போர்பயிற்சி தான் இந்த யுத் அப்யாஸ்.கிட்டத்தட்ட வருடந்தோறும் இந்த பயிற்சியை இருநாட்டு இராணுவம் அல்லது சிறப்பு படைகள் மேற்கொள்ளும்.இந்தியாவிலும்,அமெரிக்காவிலும் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது.இந்தியா அமெரிக்கா இராணுவ உறவை மேம்படுத்த இந்த பயிற்சி உதவியது குறிப்பிடத்தக்கது.

2)நோர்மாடிக் எலிபன்ட்

இந்தியா மற்றும் மங்கோலிய படைகள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி தான் நோர்மாடிக் எலிபன்ட் ஆகும்.கடைசியாக 2018ல் மங்கோலியாவில் இந்த பயிற்சி நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் 17வது பஞ்சாப் ரெஜிமென்ட் கலந்துகொண்டது.

3)இந்த்ரா

இந்தியா மற்றும் இரஷ்ய படைகள் இணைந்து மேற்கொள்ளும் பயிற்சி தான் இந்த இந்திரா போர்பயிற்சி ஆகும்.2003 முதல் இந்த பயிற்சி நடந்து வருகிறது.

4)ஹேன்ட் இன் ஹேன்ட்

இந்திய சீன இராணுவங்களின் கூட்டுப்பயிற்சி தான் இந்த ஹேன்ட் இன் ஹேன்ட் பயிற்சி.பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகளில் பெரும்பாலும் இரு நாடுகளும் ஈடுபடுவர்.

5)அஜய வாரியர்

இந்திய இங்கிலாந்து இராணுவங்கள் இணைந்து நடத்தும் கூட்டுப்பயிற்சியே இந்த அஜயே வாரியர் போர்பயிற்சி.2017ல் 20வது இராஜபுதன ரைபிள்ஸ் இந்த பயிற்சியில் இங்கிலாந்தின் 1 ராயல் ஆங்ளியன் படையுடன் பயிற்சி மேற்கொண்டது.

6)இகுவெரின்

இந்தியா மற்றும் மாலத்தீவு நாட்டு படைகள் இணைந்து நடத்தும் கூட்டுப்பயிற்சி இதுவாகும்.2017ல் நடைபெற்ற பயிற்சியில் இந்தியா சார்பில் 8வது கூர்கா ரைபிள்ஸ் படைப் பிரிவு பங்கேற்றது.

7)சூர்ய கிரண்

இந்தியா மற்றும் நேபாள் இராணுவங்கள் இணைந்து நடத்தும் பயிற்சி சூர்ய கிரண் ஆகும்.

8)சக்தி

இந்தியா மற்றும் பிரான்ஸ் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி சக்தி ஆகும்.

9)சம்பிரிதி

இந்தியா மற்றும் வங்கதேச படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி சம்பிரிதி ஆகும்.

10)கருட் சக்தி

இந்தியா மற்றும் இந்தோனேசியா படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி கருட் சக்தி ஆகும்.

11)மித்ர சக்தி

இந்தியா மற்றும் இலங்கை படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி மித்ர சக்தி ஆகும்.

12)அல்-நாகா-லி

இந்தியா மற்றும் ஓமன் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி இதுவாகும்.

13)கஞ்சார்

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி கஞ்சார் ஆகும்.

14)மைத்ரி

இந்தியா மற்றும் தாய்லாந்து படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி மைத்ரி ஆகும்.

15)போல்ட் குருசேத்ரா

இந்தியா மற்றும் சிங்கப்பூர் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி ஆகும்.

16)லாமிட்யே

இந்தியா மற்றும் சீசெல்ஸ் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி ஆகும்.

17)பிரபால் தோஸ்டிக்

இந்தியா மற்றும் கசகஸ்தான் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி ஆகும்.

18) தர்மா கார்டியன்

இந்தியா மற்றும் ஜப்பான் படைகள் இணைந்து நடத்தும் பயிற்சி சக்தி ஆகும்.