நவீன கருவிகளுடன் மோப்பநாய்களை பயிற்றுவிக்கும் இந்திய ராணுவம் !!
1 min read

நவீன கருவிகளுடன் மோப்பநாய்களை பயிற்றுவிக்கும் இந்திய ராணுவம் !!

இந்திய ராணுவம் பல்வேறு வகைகளில் தன்னை நவீனப்படுத்தி வருகிறது, வீரர்கள் மட்டத்திலும் சரி தளவாடங்களிலும் சரி பல்வேறு நவீன ஆயுதங்கள், கருவிகளை படையில் இணைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது மோப்ப நாய்களுக்கும் அதிநவீன கருவிகளுடன் இந்திய ராணுவம் பயிற்சி அளித்து வருகிறது.

இந்த கருவிகள் மூலமாக வீரர்கள் மோப்பநாய்கள் செல்லும் இடங்களில் நடப்பவற்றை பார்க்கவும் கேட்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கருவிகள் பயங்கரவாதி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பயனளிக்கும், மேலும் இக்கருவி இந்திய ராணுவத்தாலேயே வடிவமைக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல்.