Breaking News

சீன எல்லைக்குச் செல்லும் “பாரத்” ட்ரோன்கள்

  • Tamil Defense
  • July 21, 2020
  • Comments Off on சீன எல்லைக்குச் செல்லும் “பாரத்” ட்ரோன்கள்

இந்திய-சீன எல்லையில் தற்போதும் பிரச்சனை நீடித்து வருகிறது.சீனப்படைகள் இன்னும் பங்கோங் ஏரி பகுதியில் இருந்து பின்வாங்கவில்லை.

அதிஉயர் மலைப்பகுதிகளால் ஆனாது இந்த லடாக் பகுதி.இந்த பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்த டிஆர்டிஓ தயாரிப்பு பாரத் ட்ரோன்களை இந்திய இராணுவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்தியத் தயாரிப்பான இந்த ட்ரோன் அதிஉயர மலைப்பகுதிகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்க இந்திய இராணுவத்திற்கு உதவும்.

டிஆர்டிஓ வின் சண்டிகர் கிளை இந்த ட்ரோனை மேம்படுத்தியுள்ளது.உலகின் சிறந்த இலகுரக கண்காணிப்பு ட்ரோனாக இந்த பாரத் ட்ரோன் உள்ளது.எதிரியா அல்லது நண்பனா என்று அறியக்கூடிய ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் திறன் பெற்றுள்ளது.

அதிக குளிரிலும் கூட இந்த ட்ரோனை இயக்கலாம்.ட்ரோன் பறக்கும்போதே வீடியோவை நேரடியாக தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.இரவில் பறக்கும் திறனும் கொண்டது.அடர்காடுகளில் மனிதர்களை கூட கண்டறியும் திறன் பெற்றது.

ரேடாரில் அகப்படாத வண்ணம் இந்த ட்ரோன் மேம்படுத்தப்பட்டுள்ளது.