
காஷ்மீரின் ராஜோரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக் இராணுவம் அத்துமீறி தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
இராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
இரவு 12.30மணிக்கு தாக்குதலை தொடங்கிய பாக் இராணுவம் கமால் ஏரியா பகுதியில் கடும் மோர்ட்டார் தாக்குதலை நடத்தியது.இதில் ஹவில்தார் எஸ் குருங் அவர்கள் படுகாயமடைந்துள்ளார்.
பின்பு மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வீரமரணம் அடைந்துள்ளார்.