இந்திய இராணுவத்தின் நாடியாக திகழும் கலாஸ்நிகோவ் துப்பாக்கிகள்

  • Tamil Defense
  • July 12, 2020
  • Comments Off on இந்திய இராணுவத்தின் நாடியாக திகழும் கலாஸ்நிகோவ் துப்பாக்கிகள்

ருமேனியா, கிழக்கு ஜெர்மனி, பல்கேரியா ஆகிய நாடுகளிலிருந்து காலாஸ்னிகோவ் துப்பாக்கிகளை இந்திய ஆயுதப் படைகள் பரவலாக பயன்படுத்துகின்றன.
7.62×39 மி.மீ. அளவுள்ள குண்டுகளை உபயோகாக்கும் இந்த துப்பாக்கிகள் அதிகமான சேதத்தை ஏற்படுத்த வல்லது.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இதர போர் நடவடிக்கைகளில் இந்திய ஆயுதப்படைகள் பயன்படுத்தும் 4 முக்கிய ஏகே துப்பாக்க வகைகள் இவை தான் :

  1. PM Md.63 : இந்த ஏ.கே. என்பது ஏறத்தாழ சோவியத் ஏ.கே.-47 துப்பாக்கி போல தான்.அதாவது ஏகேயின் ருமேனியன் வகை. சோவியத் துப்பாக்கி போலவே மரவேலைப்பாடு மற்றும் வளைந்த 30-சுற்று மேகசின்கள் உள்ளன.ஏகேஎம் துப்பாக்கியில் உள்ளது போலவே பேரல் அசம்ப்ளிக்கு மேலே கேஸ சிலின்டர் உள்ளது.இவை தான் துப்பாக்கி தொடர்ச்சியாக இயங்க உதவம்.மற்றும் தோள்பட்டைக்கு வரும் துப்பாக்கியின் பின்பக்க முனை மரத்தால் ஆனது.
  2. இது சோவியத் 7.62×39 மிமீ தோட்டாவை பயன்படுத்துகிறது மற்றும் இது கேஸ் ஆபரேடிங் வகை.
  3. PM Md.90 : PM Md.90 துப்பாக்கி PM md. 63/65 போலவே தான் இரண்டின் உள் அமைப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று தான்.வெளியே சில மாறுதல்கள் இருக்கும்.அதாவது இதில் PA md. 86 ல் உள்ளது போல வயர் ஃபோல்டிங் ஸடாக் இருக்கும். இது பழைய சோவியத் 7.62 தோட்டாக்களை சுடக்கூடியதாகும்.

3) பல்கேரியன் AR M1:

இது பல்கேரிய தயாரிப்பாகும், இது மில்லிங் முறையில் தயாரிக்கப்பட்ட ரிசீவரை கொண்டுள்ளது ஆகையால் மற்ற ஸ்டாம்பிங் முறையில் செய்யப்பட்ட ரிசீவர்களை விடவும் அதிக ஆயுட்காலம் கொண்டது.இதில் இருவகைகள் உள்ளன முதலாவது AR M1F இதில் பின்பகுதியை அடிப்பகுதியோடு மடக்கலாம், இரண்டாவது AR M1F1 இதில் பின்பகுதியை வலது பக்கத்தில் மடித்து வைக்க முடியும். இவை இரண்டுமே நமது ஆயுதபடைகளில் பயன்பாட்டில் உள்ளன.இது ஏகே103 போல தோற்றம் அளித்தாலும் சில வித்தியாசங்கள் உண்டு, ஏகே74ல் உள்ளதை போன்று 90டிகிரி கோனத்திலான வாயு தடுப்பானை இது கொண்டிருக்கும், முன்பகுதி சைட் மற்றும் பின்பகுதி சைட் ஆகியவை ஏகே47ல் உள்ளதை போன்றிருக்கும், வாயுக்குழல் ஏகேஎம் இல் உள்ளதை போன்று இருக்கும், கைப்பிடி மற்றும் கை பாதுகாப்பு அமைப்பு ஏகே74எம் துப்பாக்கியில் உள்ளதை போன்று இருக்கும். இதன் பின்பகுதி நெகிழியால் செய்யப்பட்டு இருந்தாலும் மரத்தாலான ஏகே47 உடைய பின்பகுதியை போலிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4) MPI KMS72:

சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் கிழக்கு ஜெர்மனியால் உருவாக்கப்பட்ட துப்பாக்கி தான் இது. இதில் ஸ்டாம்ப்டு ரீசிவர் மற்றும் வலதுபக்கம் மடிக்கும் வகையிலான பின்பகுதி ஆகியவை இருக்கும். இதில் கடும் பேக்லைட் எனப்படும் கடுமையான வெப்பத்தை தாங்கும் நெகிழியால் செய்யப்பட்ட கை பாதுகாப்பு அமைப்பு இருக்கும் இதை வைத்து PM MD90க்கும் இதற்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.