இந்திய பாகிஸ்தான் எல்லையில் நேபாளத்தை சேர்ந்த கோர்க்கா வீரர் வீரமரணம் !!

நேபாள நாட்டின் கந்தகி பிரதேஷ் பகுதியை சேர்ந்தவர் சம்புர் குருங், இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் கோர்க்கா வீரர் சம்புர் குருங் படுகாயம் அடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது உயிர் அங்கு பிரிந்தது.

இதுகுறித்து பேசிய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் சம்புர் குருங் மிகவும் தைரியமான, கடமை உணர்ச்சிமிக்க வீரர் ஆவார். அவரது தன்னலமற்ற சேவைக்கு இந்த தேசம் கடன்பட்டுள்ளது என கூறினார்.

இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடியை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.