பின்வாங்குகிறோம் என சொல்லிவிட்டு ஏமாற்றுமா சீனா : இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பு !!

  • Tamil Defense
  • July 9, 2020
  • Comments Off on பின்வாங்குகிறோம் என சொல்லிவிட்டு ஏமாற்றுமா சீனா : இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பு !!

ஏற்கனவே கல்வான் மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் பகுதிகளில் இருந்து பின்வாங்கி உள்ள சீன ராணுவம் மற்ற பகுதிகளில் இருந்தும் ஏமாற்றாமல் வெளியேறுகிறதா என இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

ஆனால் கல்வான் பகுதியில் அவர்கள் வெளியேறி செல்லும் பகுதியில் உள்ள மண்சாலை மீது வரும் நாட்களில் தார்சாலை இடப்பட்டாலோ அல்லது பனிக்காலத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வர தொடங்கினாலோ சீனர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர் என கருத முடியும்.

கல்வானில் தற்போதைய நிலவரப்படி பிபி14, பிபி15 மற்றும் பிபி17ஏ ஆகிய பகுதிகளில் இருந்து சீனர்கள் வெளியேறி உள்ளனர் மேலும் இந்த பகுதிகளில் அவர்கள் கட்டிய 5 கட்டுமானங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு க்கரையில் உள்ள ஃபிங்கர்4 பகுதியில் மூன்று இடங்களில் இருந்து பின்வாங்கி ஃபிங்கர்5 பகுதிக்கு சீனர்கள் சென்றுள்ளனர். ஆனால் பின்வாங்குதல் நடைமுறையின் இரண்டாம் கட்டம் தொடங்கிய பின்னர் தான் ஃபிங்கர்5 பகுதியில் இருந்து பின்வாங்குவர் என தெரிகிறது.

அதே நேரத்தில் தெப்ஸாங் பகுதியில் இருந்து சீனர்கள் இன்னும் பின்வாங்வில்லை, நமது படையினர் ரோந்து செல்லவும் அவர்கள் அனுமதிக்கவில்லை மேலும் இப்பகுதியில் எல்லை கட்டுபாட்டு கோடு வரை அவர்கள் ஒரு சாலையையும் அமைத்துள்ளனர்.

இந்த வாரம் மீண்டும் ஒரு ஆய்வுகூட்டம் நடைபெற உள்ளது இதனை தொடர்ந்து ராணுவ கமாண்டர்கள் அளவிலான மற்றொரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது இதில் பின்வாங்கும் நடவடிக்கைகள் சீராக நடைபெறுகிறதா என ஆய்வு செய்யப்படும்.