இஸ்ரேலில் இருந்து உடனடியாக ஸ்பைக் ஏவுகணைகளை வாங்கும் இந்தியா !!

மத்திய அரசு இந்திய ராணுவத்திற்காக உடனடியாக இஸ்ரேலிடம் இருந்து ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது.

இதன்படி 200 ஸ்பைக் ஏவுகணைகள் மற்றும் 12 லாஞ்சர்களை இந்திய தரைப்படை பெற உள்ளது.இந்த ஏவுகணைகள் எல்லை பகுதிகளில் உள்ள படையணிகளுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

கடந்த வருடமும் ஏறத்தாழ இதே அளவிலான ஸ்பைக் ஏவுகணைகள் வாங்கப்பட்டன, இந்த ஏவுகணைகள் அனைத்தும் பாகிஸ்தான் எல்லையில் பயன்பாட்டில் உள்ளன.

அதை போலவே இந்த புதிய தொகுதி சீன எல்லையோர பகுதிகளில் பயன்படுத்தி கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.