
இந்தியா கஸ்ரேலிய பாதுகாப்பு படைகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் மாவோஸ் ஃபயர்ஃப்ளை எனும் தற்கொலை தாக்குதல் நடத்தும் ஆளில்லா விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இந்திய விமானப்படை இத்தகைய ரகத்தை சேர்ந்த ஹார்ப்பி மற்றும் ஹெரோன் ட்ரோன்களை பயன்படுத்தி வரும் நிலையில் இந்திய தரைப்படைக்கு இதனை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் பறக்கும் வகையில் இயங்கக்கூடிய இது நகரப்பகுதிகளில் 500 மீட்டர் தொலைவும் திறந்த வெளியில் 1 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பும் கொண்டது.
டேப்லட் போன்ற ரிமோட் கண்ட்ரோல் மூலமாக இது இயங்கும், மேலும் வீரர்கள் சுமந்து செல்லக்கூடிய வகையில் எடை குறைவானதாகும்.
இதன் மூலம் இந்திய தரைப்படையின் காலாட்படை இன்னும் வலுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.