பூஞ்ச் பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து மோர்ட்டார் தாக்குதல்

  • Tamil Defense
  • July 23, 2020
  • Comments Off on பூஞ்ச் பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து மோர்ட்டார் தாக்குதல்

பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாக் இராணுவம் தொடர்ந்து ஷெல்களை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களுக்கு நமது பக்கம் இருந்து கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காலை 11 மணி அளவில் கஸ்பா செக்டாரில் இந்த தாக்குதலை பாக் இராணுவம் தொடங்கியது.

இவ்வாறு கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பாக் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பூஞ்ச் மற்றும் இராேஜோரியை ஒட்டியுள்ள இந்திய பகுதிகளை குறிவைத்து பாக் தாக்குதல் நடத்தியது.