நாளை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தரைப்படை தளபதி ஆகியோர் லடாக் விசிட் !!

நாளைய தினம் அதாவது வெள்ளிக்கிழமை இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லடாக் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

சீனா பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமான முறையில் முடித்து கொள்வோம் என சொல்லி கொண்டே தெப்ஸாங், பாங்காங் ஸோ உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த மாதம் 25ஆம் தேதி ஜெனரல் நரவாணே லடாக் விசிட் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டு பின்னர் பிரதமர் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கு நிலைமையை விளக்கி உள்ளார்.

இந்த ஆய்வுக்கு பின்னரே பல களரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு உளாளன. பல பகுதிகளில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது, அதே நேரத்தில் நமது தரப்பிலும் படைக்குவிப்பு மற்றும் தளவாடங்கள் குவிப்பு ஆகியவை நிகழ்ந்துள்ளது.

ஆகவே நாளைய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தரைப்படை தளபதி ஆகியோரின் விசிட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.