
கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் பிரச்சினையில் ஈடுபட்டுள்ளதால் சுமார் 30,000 இந்திய படையினர் கிழக்கு லடாக்கில் முகாமிட்டு உள்ளனர்.
இந்த பிரச்சினை முற்றிலுமாக முடிவுக்கு வர சிறிது காலம் ஆகலாம என கூறப்படும் நிலையில், இந்தியா தனது வீரர்களை இப்பிரச்சினை ஒய்ந்தாலும் கூட பின்வாங்க தயாராக இல்லை.
ஆகவே இந்தியா தனது படையினருக்கு பல ஆயிரம் கடும் குளிரை தாங்கும் வகையிலான கூடாரங்களை வாங்க அவசர நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி கிழக்கு லடாக்கில் இனி இந்திய ராணுவம் அதிகளவில் துருப்புகளை நிரந்தரமாக நிலை நிறுத்தும் வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.