2 ரெஜிமென்டுகள் ஆகாஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்க உள்ள இராணுவம்
1 min read

2 ரெஜிமென்டுகள் ஆகாஸ் வான் பாதுகாப்பு அமைப்புகள் வாங்க உள்ள இராணுவம்

இரு ரெஜிமென்டு ஆகாஸ் 1எஸ்-2000 ஏவுகணைகள்- சுமார் 3.1பில்லியன் டாலர்கள் செலவில் இந்திய இராணுவம் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆகாஸ் 1எஸ் ஒரு நடுத்தூர ரக வான் பாதுகாப்பு ஏவுகணை ஆகும்.வானில் வரும் ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியழிக்கும் இந்த அமைப்பு ஒரு இந்தியத்தயாரிப்பு ஆகும்.

எதிரியின் போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்க கூடியது ஆகும்.18-30கிமீ தூரம் வரும் இலக்குகளை துல்லியமாக அழிக்க வல்லது.

இந்திய இராணுவத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு பழைய சோவியத் கால SA-6 வான் பாதுகாப்பு அமைப்பிற்கு மாற்றாக பயன்படுத்தப்பட உள்ளது

இந்திய இராணுவம் ஏற்கனவே இரு ரெஜிமென்டுகள் இயக்கி வருகிறது.தற்போது இவற்றில் சிலவற்றை எல்லைக்குள் நகர்த்தியுள்ளது.