
லடாக்கில் இந்திய தரைப்படையின் BMP2 கவச வாகனங்கள் சீன தாக்குதலை முறியடிக்கும் வகையில் குவிக்கப்பட்டு வருகின்றன.
30மிமீ பிரதான துப்பாக்கி, 7.62 இயந்திர துப்பாக்கி, டாங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகிய உயுத அமைப்புகளை கொண்ட இதனால் தாழ்வாக பறக்கும் வானூர்திகளையும் வீழ்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வான் பகுதியில் குவிக்கப்படும் இவை சீன ராணுவம் ஏதேனும் தாக்குதல் நடத்தினால் முறியடிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்கள் முன்னரே லடாக்கில் இந்திய ராணுவம் தனது டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களை களமிறக்கியது.
ஆனால் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு அதிகளவில் கவச வாகனங்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.