லடாக்கில் நிலைமை மோசமாகி வருவதை தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தகளை மேற்கொண்டு வருகிறது இந்திய பாதுகாப்பு படைகள் .
இராணுவத்திற்கு நிதி உதவிகள் வழங்குவதில் எந்த தடங்களும் இல்லை எனவும் தேவையான நிதி உதவிகள் விரைவாக கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவசர நிதியாகவும் இராணுவத்திற்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இராணுவத்தின் டி-72 மற்றும் டி-90 முதன்மை டேங்குகளுக்காக armour-piercing fin-stabilised discarding sabot (APFSDS) குண்டுகள்,ஹெரோன் ட்ரோன்கள்,மனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்புகள்,கண்ணிவெடிகள்,அதிஉயர்பகுதிகளில் உபயோகிக்கப்படும் உடைகள் மற்றும் மேலும் பல அவசரகதியில் பெறப்பட்டு வருகின்றன.
இராணுவத்திற்கு அவசரகாலத்தில் மிக முக்கிய தளவாடங்கள் பெற அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளன.