
இந்தியாவும் ரஷ்யாவும் விரைவில் ராணுவ தளங்களை பயன்படுத்தி கொள்ளும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளன.
தற்போது இந்த ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு ரஷ்ய அதிபர் இந்தியா வரும் போது ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இதன்படி இந்தியா கடற்படையின் கப்பல்கள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்கள் ரஷ்ய தளங்களை பயன்படுத்தி கொள்ள முடியும், அதேபோல் அவர்களும் நமது தளங்களை பயன்படுத்தி கொள்ள முடியும்.
இத்தகைய ஒப்பந்தங்களை இந்தியா ஏற்கனவே அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.