Breaking News

இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ட்ரோன் தயாரிக்க பேச்சுவார்த்தை: பெண்டகன் அதிகாரி அறிவிப்பு !!

  • Tamil Defense
  • July 22, 2020
  • Comments Off on இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து ட்ரோன் தயாரிக்க பேச்சுவார்த்தை: பெண்டகன் அதிகாரி அறிவிப்பு !!

மூத்த பெண்டகன் அதிகாரி எல்லன் எம் லார்டு சமீபத்தில் பேசுகையில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ட்ரோன் தயாரிக்க முடிவு செய்துள்ளன.

இதன்படி இந்த திட்டம் இந்திய விமானப்படை, அமெரிக்க விமானப்படை ஆய்வகம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஒரு இந்திய நிறுவனம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

இதன் மூலமாக இந்திய அமெரிக்க பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் அதிகரித்துள்ளது தெரிகிறது.