
கிழக்கு லடாக்கில் சீனாவுடனான பிரச்சினை நடைபெற்று வரும் நேரத்தில் பலத்தை அதிகரிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
தலைநகர் தில்லியில் விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்று வந்த தளபதிகள் ஆலோசனை கூட்டத்தில் நிறைவு நாளன்று பேசினார்.
அப்போது இந்திய விமானப்படையின் பலத்தை மிகவும் வேகமாக அதிகரிப்பது அவசியம் என விமானப்படை தளபதிகளிடம் வலியுறுத்தினார்.
நிறைவு நாளன்று இந்திய கூட்டுபடைகள் தளபதி ஜெனரல் பிபின் ராவத், தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் ஆகியோர் பேசினர்.