சீனாவுடனான எல்லையில் உள்ள முக்கிய தளங்களில் அதிக போர்விமானங்கள் குவிக்கும் விமானப்படை

கிழக்கு லடாக் பகுதியில் இந்திய விமானப்படை முன்னனி தாக்கும் போர்விமானங்கள்,தாக்கும் வானூர்திகள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் ஆகியவற்றை எல்லையில் உள்ள வியூக முக்கியத்துவம் வாய்ந்த தளங்களில் விமானப்படை குவித்து வருகிறது.

முன்னனி எல்லைக்கு படைப்பிரிவுகள் மற்றும் ஆயுதங்களை கொண்டு செல்ல சி-17 மற்றும் சி-130ஜே விமானங்கள் உபயோகிக்கப்படுகின்றன.

இவை தவிர ஐஎல்-76 விமானங்களுமம உபயோகிக்கப்பட்டு 3488கிமீ எல்லை முழுதும்படைக்குவிப்பு நடைபெறுகிறது.

Sukhoi 30 MKI, Jaguar, Mirage 2000 ஆகிய விமானங்கள் லே மற்றும் ஸ்ரீநகர் பகுதிக்கு நகர்த்தப்பட்டுள்ளன. Apache தாக்கும் வானூர்திகள் மற்றும் Chinook கனஎடை தூக்கும் வானூர்திகள் ஆகியவை முன்னனி பகுதிகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளது.

லடாக் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் வான் ரோந்து பகுதிகளை விமானப்படை விமானங்கள் அதிகரித்துள்ளன.சீனாவும் தனது ரோந்து பணிகளை முடுக்கி விட்டுள்ளது.