இரவு-பகல் அனைத்து காலநிலை ஆபரேசன் திறனை லடாக்கில் சோதனை செய்யும் விமானப்படை

  • Tamil Defense
  • July 7, 2020
  • Comments Off on இரவு-பகல் அனைத்து காலநிலை ஆபரேசன் திறனை லடாக்கில் சோதனை செய்யும் விமானப்படை

தங்களது இரவு பகல் மற்றும் அனைத்து காலநிலை காம்பட் திறனை லசடாக்கில் இந்திய விமானப்படை சோதனை செய்து வருகிறது.முன்னனி தாக்கும் விமானங்கள்,தாக்கும் வானூர்திகள் மற்றும் பல ஆபரேசன்களுக்கு உதவும் வானூர்திகள் உதவியுடன் இந்த திறன் சோதிக்கப்பட்டுவருகிறது.லடாக்கின் முன்னனி தளங்களில் இருந்து இந்ண ஆபரேசன்கள் நடைபெற்று வருகிறது.

விமானப்படையின் MiG-29 , Sukhoi-30s, Apache AH-64E தாக்கும் வானூர்திகள் மற்றும் CH-47F (I) வானூர்திகள் இந்த இரவு நேர ஆபரேசன்களில் கலந்து கொண்டுள்ளன.

தான் முழு ஆபரேசன் தயார்நிலையில் இருப்பதாகவும் எந்த காலநிலையிலும் இரவோ பகலோ அனைத்திலும் தயாராக இருப்பதாக எதிரிக்கு உணர்த்தியுள்ளது விமானப்படை.

இதற்கு முன் மலைப்பகுதிகளில் இரவுகளில் விமானங்கள் பறக்க சில தடைகள் இருந்தன.தற்போது அவையெல்லாம் இல்லை.மலைப்பகுதிகளின் வளைவு நெளிவு மற்றும் ஆழ உயர கணிப்புகள்,அவற்றின் நிழல்கள் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் தவறுகளை தனது அனுபவத்தின் மூலம் கடந்துள்ளது விமானப்படை.

தற்போது கல்வான் பகுதியில் இருந்து சீனப்படைகள் 1200மீ வரை பின்னகர்ந்துள்ளது.இருந்தும் இந்தியப் படைகள் முழுக் கவனத்துடன் எப்போதும் தயார் நிலையிலேயே தான் உள்ளன.