இந்தியா சுதந்திரமான வெளியுறவு கொள்கையின்படி செயல்படும் என நம்புகிறோம் : அமைச்சர் ஜெய்ஷங்கர் பேச்சுக்கு எதிரொலி !!

சமீபத்தில் நமது வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் இந்தியா தனது அணிசேரா கொள்கையை களைய வேண்டும் என குறிப்பிட்டு பேசினார்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு பேசினார்.

அப்போது இந்தியா தொடர்ந்து சுதந்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்றி பொறுப்புடன் செயல்படும் என நம்புவதாக குறிப்பிட்டார்.