தென்சீன கடல் பகுதியில் பங்களிப்பு வழங்க இந்தியா விருப்பம் : ஃபிலிப்பைன்ஸ் !!

  • Tamil Defense
  • July 8, 2020
  • Comments Off on தென்சீன கடல் பகுதியில் பங்களிப்பு வழங்க இந்தியா விருப்பம் : ஃபிலிப்பைன்ஸ் !!

சீனாவின் முரட்டுத்தனமான செயல்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்சீன கடல்பகுதியில் தனது பங்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்ஸா கூறியுள்ளார்.

இது பற்றி மேலும் அவர் பேசுகையில் பிற நாடுகள் தென்சீன கடல் பகுதியை பயன்படுத்தி கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை, இங்கிலாந்து, ஃபிரெஞ்சு கடற்படைகள் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து செல்வதாகவும் அதை போல் இந்தியாவும் தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்.

இந்த செய்தி ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுவடெர்டெ மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பின்னர் வந்துள்ளது.

கடந்த வருடம் இந்தியா அமெரிக்கா ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானிய கடற்படைகள் தென்சீன கடல் பகுதியில் கூட்டாக ரோந்து சென்றது குறிப்பிடத்தக்கது.