அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்க இந்தியா விருப்பம் !!

  • Tamil Defense
  • July 6, 2020
  • Comments Off on அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்க இந்தியா விருப்பம் !!

மிக நீண்ட காலமாகவே ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் இந்திய பாதுகாப்பு கொள்முதல் கொள்கையில் இடம்பெற்றிருந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டது.

தற்போது இந்தியா இந்த ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்க ஆர்வமாக உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ப்ரடேட்டர் எனப்படும் இந்த ட்ரோன் உளவு, கண்காணிப்பு, இலக்குகளை அடையாளம் கண்டுபிடித்தல், தாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.

இந்த ட்ரோன்கள் ஈராக், சிரியா, லிபியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பயன்படுத்தபட்டு பல வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரோன்களில் 4 ஹெல்ஃபயர் ஏவுகணைகள், 226கிலோ எடை கொண்ட இரு லேசர் வழிகாட்டி குண்டுகளை சுமந்து செல்லும் திறன் கொண்ட கொண்டவையாகும்.

சீனா பாகிஸ்தானிற்கு இரண்டு விங் லூங் ட்ரோன் அமைப்புகளை வழங்கவுள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அமெரிக்கா இந்த ட்ரோனை இந்தியாவிற்கு அளிக்க சிறிது தயக்கம் காட்டுவதாக தெரிகிறது.

தற்போது அமெரிக்கா இதனை தராவிட்டால் கூட நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் சில இத்தகைய ட்ரோன்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன, ஆகவே கூடிய விரைவில் இந்தியா தனது ராணுவத்தில் இத்தகைய ட்ரோன்களை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.