
இந்தியாவால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படக்கூடிய ஆயுதங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிப்பது குறித்து மத்திய இராணுவ அமைச்சகம் பரிசீலனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகிள்ளது.
இறக்குமதிக்கு தடை செய்யப்பட உள்ள ஆயுதங்களின் லிஸ்ட் நேரத்திற்கு நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா தற்போது ரோந்து கப்பல்கள்,வானூர்திகள்,சோனார்கள்,ரேடார்கள்,ஏவியோனிக்ஸ், ரேடார் எச்சரிக்கை அமைப்புகள்,சிறிய ரக ஆயுதங்கள்,கடலோர பாதுகாப்பு அமைப்புகள்,உடற்கவசம் ஆகியவற்றை ஏற்றுமதியும் செய்து வருகிறது.