
இந்தியா நாக் எனும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணையை மேம்படுத்தியுள்ளது.இந்த ஏவுகணை தரைசார் அமைப்புகள் அதாவது நமிகா கவச வாகனத்தில் பொருத்தி ஏவப்படக்கூடியது.
இதில் வான் வகையான த்ருவாஸ்திரா வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.வானூர்தியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்படக்கூடியது.அதாவது ஏர்-ஃசர்பேஸ் ஏவுகணை ஆகும்.
ஜீலை 15 மற்றும் 16 தேதிகளில் ஒடிசாவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
எதிரி டேங்குகள்,பங்கர்கள் போன்றவற்றை தாக்க வல்லது.அனைத்து காலநிலைக்கும் ஏற்றது.இரவு மற்றும் பகல் என எந்த காலநிலையிலும் உபயோகிக்கலாம்.500மீ முதல் 4கிமீ வரை உள்ள இலக்கை தாக்கியழிக்க கூடியதாகும்.
இமேஜிங் இன்பிராரெட் சீக்கர் உதவியுடன் இயங்ககூடியது.இது மூன்றாம் தலைமுறை ஏவுகணை ஆகும்.