மனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு;பணியை தொடங்கிய டிஆர்டிஓ

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on மனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்பு அமைப்பு;பணியை தொடங்கிய டிஆர்டிஓ

மனிதனால் ஏவப்படக்கூடிய வான் பாதுகாப்ப அமைப்பை மேம்படுத்துவதற்கான பணியை டிஆர்டிஓ தொடங்கியுள்ளது.MANPADS எனப்படும் இந்த அமைப்பை மேம்படுத்துவற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Dual-band infrared homing seeker அல்லது multi-spectral optical seeker தொழில்நுட்பத்துடன் 25கிகி எடைக்கு சற்று குறைவான இந்த அமைப்பு மேம்படுத்தப்படும்.

வானில் வரும் இலக்குகளை நோக்கி ஏவப்பட்டு தாக்கி அழிக்க கூடிய இந்த அமைப்பை இரவு மற்றும் பகலில் உபயோகிக்கலாம். 6கிமீ வரை உள்ள வான் இலக்குகளை அழிக்க வல்லது இந்த அமைப்பு.

அதி உயர் பகுதிகள்,சமவெளி,பாலைவன பகுதிகள்,கடலோர பகுதிகள் என அனைத்து இடங்களில் இருந்தும் இந்த அமைப்பை உபயோகிக்க முடியும்.

போர்க்கப்பல்களில் இருந்தும் இவற்றை ஏவி உபயோகிக்க முடியும்.