இந்தியா அதிரடி : தைவானுக்கு புதிய தூதர் நியமனம்; சீனாவுக்கு சிக்னலா ??

சீனாவுடன் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் தைவானுக்கான புதிய தூதரை இந்திய அரசு நியமித்துள்ளது.

நமது வெளியுறவு துறையில் இரு அமெரிக்க கண்டங்களுக்கான துணை செயலராக பதவி வகித்து வரும் மூத்த அதிகாரியான கவுரங்கலால் தாஸ் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

தைவானுடன் இந்தியா அதிகாரப்பூர்வ ராஜாங்க உறவுகளை கொண்டிருக்கவில்லை, இந்திய தைவான் கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு அலுவலகத்தை தைபேய் நகரில் இந்தியா நடத்தி வருகிறது.

அதற்கு பொறுப்பாளராக இருக்கும் ஶ்ரீதரன் மதுசூதனன் ஒய்வு பெறும் நிலையில் மிகுந்த அனுபவம் மிக்க மூத்த அதிகாரி ஒருவரை அங்கு இயக்குநராக இந்தியா நியமிக்க முடிவு செய்திருப்பது சீனாவுக்கான மறைமுக செய்தியாகவே பார்க்கப்படுகிறது.