சிறப்பு படைகளை எல்லைக்கு அனுப்பும் இந்திய இராணுவம்-சிறப்பு தகவல்கள்

  • Tamil Defense
  • July 2, 2020
  • Comments Off on சிறப்பு படைகளை எல்லைக்கு அனுப்பும் இந்திய இராணுவம்-சிறப்பு தகவல்கள்

இந்தியா சீனப் பிரச்சனை எந்நேரத்திலும் மோதலாக வெடிக்க சாத்தியமுள்ள இந்த நேரத்தில் இந்திய இராணுவம் தனது சிறப்பு படைகளை எல்லை நோக்கி அனுப்பியுள்ளது.

இந்திய இராணுவம் தனது பாரா சிறப்பு படை வீரர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது லடாக் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.அங்கு ஏற்கனவே போர்பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.எதிரி நாடுகளில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தும் திறனுள்ள இந்த படைப் பிரிவு தான் மியான்மர் மற்றும் பாகிஸ்தானிற்குள் புகுந்து பயங்கரவாதிகளை வேட்டையாடியது.

அனைத்து காலநிலைகளுக்கும்,அனைத்து விதமான இட அமைப்புக்கும் ஏற்றவாறு இந்த சிறப்பு படை ரெஜிமென்ட் வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.எடுத்துக்காட்டாக டெசர்ட் ஸ்கார்பியன்ஸ் அல்லது 10வது பாரா படை பாலைவன போர்முறைகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள்.அவர்களால் பயங்கரவாதிகளுக்கும் எதிராகவும் சிறப்பாக போரிட முடியும்.எதிரி பகுதிகளுக்குள் புகுந்து அனைத்துவித சவால்களையும் சந்தித்து வெற்றி பெறக்கூடியவர்கள் மலை எலிகள் எனப்படும் 9வது பாரா படை.தவிர காடு முறை போர்,பனிப் பிரதேசம்,ஆறுகள்,உயர் மலைகள் என அனைத்திலும் போரிட தேர்ந்தவர்கள்.

அவர்களின் பயிற்சியும் மற்ற இராணுவ படைகளிடம் இருந்து மாறுபட்டது.நூற்றில் பத்து பேர் கூட பாரா படைப் பிரிவில் நுழைவது சிரமம்.வீரங்களிலும் வீரம் மட்டுமே பாரா பிரிவில் நுழையும்.

ரெட் டெவில்ஸ் அல்லது சிவப்பு பேய்கள் என இவர்கள் அறியப்படுவர்.ஏற்கனவே லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.