
காரகோரம் கணவாய் அருகே உள்ள கடைசி காவல் நிலைக்கு ஏவுகணை ஏவக்கூடிய டி-90 டேங்குகள் ஒரு ஸ்குவாட்ரான்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்சய் சின் அருகே சீனா அதிகபட்சமாக 50000 வீரர்களை குவித்துள்ள நிலையில் முதல் முறையாக ஒரு ஸ்குவாட்ரான் அதாவது 12 டேங்குகள் அனுப்பப்பட்டுள்ளன.இவை தவிர வீரர்களுக்கான கவச வாகனங்கள்,4000 வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளது.தௌலத் பெக் ஓல்டி பகுதியில் சீனா ஏதேனும் சாகசத்தில் ஈடுபட முயன்றால் அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தௌலத் பெக் ஓல்டி அடுத்த கடைசி நிலை 16000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.காரகோரம் கணவாய்க்கு தெற்கிலும்,சிப்சாப் ஆற்றின் கரையிலும் இந்த நிலை அமைந்துள்ளது.
சீனப்படைகள் பின்வாங்க சம்மதித்தாலும் சீனர்களை நம்ப முடியாது.சாங்சம் பகுதியில் ஏற்கனவே சீனா 36கிமீ நீள சாலை அமைத்துள்ளது.இந்த பகுதி 1962 போரில் இழந்த பகுதி ஆகும்.