
இந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரிக்கு மேலதிக அதிவேக படகுகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த படகுகள் இந்திய கடற்படைக்கு சொந்தமானவை ஆகும், மேலும் இவை அதிக வலிமைக்காக இரும்பு சட்டத்தால் கட்டமைக்க பட்டவை ஆகும்.
இந்த படகுகள் இந்திய விமானப்படையின் சி17 போக்குவரத்து விமானங்கள் மூலமாக லடாக் கொண்டு செல்லப்பட உள்ளன.
மொத்தம் இத்தகைய 12 படகுகளை அனுப்பவுள்ள இந்திய அரசு இவற்றை கொண்டு பாங்காங் ஸோ ஏரியில் சீன ராணுவ வலிமைக்கு சவால் விடுக்க திட்டமிட்டு உள்ளது.
பாங்காங் ஸோ ஏரியில் சீன ராணுவம் தனது டைப் 928பி அதிவேக படகுகளை நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.