
இந்தியா தீடிரென சீன எல்லைக்கு சுமார் 35,000 படை வீரர்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது.
இருதரப்பும் 5ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் நிலையில் இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கை வருகிறது.
ஏற்கனவே சீனாவின் செயல்பாடு இப்பகுதியில் நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,
இந்த நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டில் செலவீனங்களை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்திய அரசு பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்காவிட்டால் நவீனப்படுத்துதல் திட்டங்களையும் கடுமையாக பாதிக்கும் என ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார்.