சீனாவுக்கு எதிராக தனது பலத்தை இந்தியா நிரூபித்துள்ளது-அமெரிக்கா

  • Tamil Defense
  • July 30, 2020
  • Comments Off on சீனாவுக்கு எதிராக தனது பலத்தை இந்தியா நிரூபித்துள்ளது-அமெரிக்கா

சீனாவுக்கு எதிராக தனது பலத்தையும் திறனையும் இந்தியா நிரூபித்துள்ளது என அமெரிக்க அதிபரின் துணை அசிஸ்டன்ட் லீசா கர்டிஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்தியா ஒரு பலமிக்க சக்திவாய்ந்த நாடாக வளரவும் இந்திய பெருங்கடல் பகுதியை அமைதியுற செய்யவும் இந்தியாவிற்கு அமெரிக்கா உதவும் என அவர் கூறியுள்ளார்.

சீன ஆப்களை தடை செய்தல் மற்றும் சீன முதலீடுகளை தடைசெய்ததன் மூலம் சீனாவின் முரட்டுதனத்திற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

இந்திய-சீன எல்லைப் பிரச்சனையில் மொத்த அமெரிக்காவும் தற்போது இந்தியாவின் பக்கம் நிற்கிறது.