இந்திய ராணுவத்திற்கு ஏற்கனவே 72,000 Sig716 துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலையில்,
புதிய ஒப்பந்தம் வழியாக மேலதிகமாக 72,000 புதிய Sig716 துப்பாக்கிகளை வாங்க ராணுவம் முடிவு செய்துள்ளது.
அரசு வழங்கிய சிறப்பு நிதி மற்றும் கொள்முதல் அதிகாரங்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல வருட காலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் துப்பாக்கியை மாற்றிவிட்டு 1 லட்சத்து 44ஆயிரம் Sig716 துப்பாக்கிளையும் மீதமுள்ள வீரர்களுக்கு AK203 துப்பாக்கிகளையும் வழங்க ராணுவம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இஸ்ரேலிடம் இருந்து 16000 இலகுரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.