1 min read
தென்சீன கடல்பகுதி குறித்த இந்தியாவின் நேரடி அறிக்கை : சீனாவுக்கு அரசியல் செக் !!
இந்தியா முதல்முறையாக தென்சீன கடல் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது, இது நேரடியாக சீனாவை தாக்கும் வகையிலும் சர்வதேச அரங்கில் அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கும் வகையிலும் உள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தென்சீன கடல் பகுதி சர்வதேச பார்வையின் கீழ் இருப்பதாகவும், அந்த பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை இந்தியா மனதார விரும்புவதாகவும்” குறிப்பிட்டுள்ளார்.
இது சர்வதேச அரங்கில் இந்தியா சீனாவுக்கு எதிராக நடத்தும் காய் நகர்த்தலாகவே பார்க்கப்படுகிறது.