சீன மோதல் எதிரொலி-அமெரிக்காவிடம் இருந்து சிறிய உளவு விமானங்கள் வாங்க இராணுவம் திட்டம்

கையால் ஏவப்படக்கூடிய ,ரிமோட்டால் கட்டுப்படுத்தக்கூடிய சிறிய ஆளல்லா உளவு விமானமான Raven (ராவென்) என்னும் விமானத்தை அமெரிக்காவிடம் இருந்து இந்திய இராணுவம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தவிர இஸ்ரேல் தயாரிப்பான Spike Firefly “loitering” ammunition என்னும் வெடிபொருளையும் பெற உள்ளது.இலக்கின் மீது சுற்றி பறந்து அவற்றை தாக்கி அழிக்க இந்த பறக்கும் குண்டுகள் உதவும்.ஆர்டில்லரிகள் தவிர இந்த குண்டுகள் தரைப்படைக்கு மாபெரும் பலத்தை அளிக்கும்.

இராணுவம் தனது பலத்தை கூர் செய்து வரும் வேளையில் விமானப்படை இந்த மாதத்தில் ரபேல் விமானங்கள் பெற உள்ளது.

மறுபுறம் கடற்படை தனது இரண்டாவது பலிஸ்டிக் ஏவுகணை ஏவக்கூடிய அணுசக்தி நீர்மூழ்கியான ஐஎன்எஸ் அரிகத்தை இந்த வருட இறுதிக்குள் படையில் இணைக்க உள்ளது.அரிகந்த் வகை நீர்மூழ்கிகளில் இது இரண்டாவது நீர்மூழ்கி ஆகும்.

கிட்டத்தட்ட 200 RQ-11 UAV-க்கள் வாங்கப்பட உள்ளன.10கிமீ வரை இந்த விமானங்கள் செல்லக்கூடியவை.500மீ உயரத்தில் மணிக்கு 95கிமீ வேகத்தில் இவை பறக்க கூடியது.முன்னனி போர் முனைகளில் உளவு பணிகள் மேற்கொள்ள இந்த விமானங்கள் இராணுவத்திற்கு உதவும்.

தவிர இஸ்ரேலிடம் இருந்து அவசரமாக Spike Mark III டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகளையும் இந்திய இராணுவம் பெற்றுள்ளது.இதற்கு பிறகு தற்போது firefly வெடிபொருளை பெற உள்ளது.
1-கிமீக்குள் உள்ள இலக்கின் மீது பறந்து/தொடர்ந்து பறந்து இலக்கை துல்லியமாக தாக்க வல்லது.இலக்கு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டால் இந்த குண்டை திரும்ப வரவழைத்து பெற்று கொள்ளலாம்.

இந்திய இராணுவம் மற்றும் விமானப்படை லடாக் எல்லையில் கவனத்தை குவித்துள்ள நிலையில் கடற்படை இந்திய பெருங்கடலில் சீனக் கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது.

இந்த பிரச்சனையின் போதே ஆறு சீன கப்பல்களை இந்திய கடற்படை விரட்டியடித்துள்ளது.குவாதர் துறைமுகம் பக்கம் சுற்றி திரிந்த இந்த சீனக்கப்பல்களை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்துள்ளது.அதன் பிறகு முதலில் மூன்று கப்பல்கள் பின்பு மூன்று கப்பல்கள் என ஆறு கப்பல்களும் சீனாவிற்கே திரும்பியுள்ளன.தற்போது ஒரு சீன போர்க்கப்பல்கள் கூட இந்திய பெருங்கடலில் இல்லை.