திபெத்திய மக்களுக்காக அதிகம் உதவியது இந்தியா மட்டுமே; இந்தியாவை என்றும் நாங்கள் ஆதரிப்போம் : திபெத்திய தலைவர் !!

  • Tamil Defense
  • July 10, 2020
  • Comments Off on திபெத்திய மக்களுக்காக அதிகம் உதவியது இந்தியா மட்டுமே; இந்தியாவை என்றும் நாங்கள் ஆதரிப்போம் : திபெத்திய தலைவர் !!

மத்திய திபெத் நிர்வாகம் வெளிநாடுகளில் இயங்கும் திபெத்திய அரசு ஆகும் இதன் தலைவர் லோப்சாங் ஸாங்கே ஆவார்.

இவர் சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் திபெத்திய மக்களுக்காக அதிகம் உதவியது இந்தியா மட்டுமே, திபெத்திய மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதும் இந்தியா தான்.

திபெத்தியர்கள் இன்றுவரை இந்தியாவுக்கு ஆதரவாகவே இருந்துள்ளனர், இனியும் தொடர்ந்து இந்தியாவை திபெத்திய மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் கூறினார்.

கல்வான் பகுதியில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் திபெத்திய மக்கள் சீனாவுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி இந்தியாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் சீனாவின் விரிவாக்க நடவடிக்கைகளை சாடிய அவர் இனிமேலும் சீனாவால் திபெத் மக்களை அச்சுறுத்த முடியாது என்றார்.

மேலும் பல திபெத்தியர்கள் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்துள்ளனர் திபெத் மக்களின் ஆதரவு என்றைக்குமே இந்தியாவிற்கு தான் என்றார்.