ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் திஜ்ஜானி மொஹம்மது பாந்தே ஆவார் இவர் சமீபத்தில் “இந்தியா சர்வதேச அரங்கில் மிகவும் பொறுப்பான நாடு எனவும் ஐநா பாதுகாப்பு சபையில் இடம்பெற்றுள்ளதன் மூலமாக இந்தியா பல பிரச்சினைகளை தீர்க்க உதவக்கூடும் என்றார்.
மேலும் சர்வதேச அமைப்புகளான ஜி7 கூட்டமைப்பு, காமன்வெல்த், அணிசேரா அமைப்பு போன்ற அமைப்புகளுடன் நல்ல உறவு இந்தியாவுக்கு உள்ளது.
இதை தவிர பல்வேறு சர்வதேச அமைப்புகளில் இந்தியா அளித்து வரும் பங்களிப்பு உலக அளவிலான செல்வாக்கு கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்ற உள்ளது.
இந்தியா தனது பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளிலும் தனது பங்களிப்பை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்