1 min read
இந்தியா அமெரிக்காவுக்கு நல்ல நட்பு நாடு : அமெரிக்க வெளியுறவு அமைச்சர் !!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ செவ்வாய் கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்தியா அமெரிக்காவுக்கு நல்ல நட்பு நாடு என குறிப்பிட்டார்.
மேலும் தனது இந்திய சகாவான வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர் உடன் அடிக்கடி பேசி வருவதாகவும், இந்தியா மற்றும் சீனா கடையேயான பிரச்சினை குறித்தும் பேசியதாகவும் கூறினார்.
மேலும் பேசுகையில் இந்தியா சீன செயலிகளை தடை செய்ததை சுட்டி காட்டிய அவர் உலகத்தில் உள்ள நாடுகள் பல ஒரு பெரிய சவாலை வீழ்த்த தயாராக உள்ளதாக கூறினார்.
மேலும் சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி முறையின் நேரடியான விளைவு தான் காரணம் எனவும் அவர் கூறினார்.