
இஸ்ரேலிய பாதுகாப்பு படை வசமிருக்கும் பாரக்-8 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு படைகள் பெற்று சீனாவுக்கு எதிராக இந்திய எல்லைக்கு நகர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவரச நடவடிக்கையாக இஸ்ரேலிடமிருந்து இந்த அமைப்புகள் பெறப்பட்டு எல்லைக்கு நகர்த்தபடுகிறது.ஏற்கனவே இந்திய தயாரிப்பு ஆகாஸ் ஏவுகணைகளும் எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
LR-SAM எனப்படும் இந்த பாரக்-8 ஏற்கனவே கடற்படையில் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையின் தரைப்படை வகை ஆகும்.விமானங்கள்,கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்ககூடியது இந்த பாரக்-8 ஏவுகணை.
இந்த ஏவுகணை அமைப்பு 100கிமீ தொலைவில் வரும் இலக்குகளை வரை தடுத்து அழிக்க கூடியது.