
இந்திய சமீபத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ரஷ்யா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு எல்லை நிலவரத்தை எடுத்துரைத்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சக செயலர் ஹர்ஷ் வி ஷ்ரிங்க்லா மேற்குறிப்பிட்ட நாடுகளின் தூதர்களோடு நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் தற்போது எல்லலயில் உள்ள நிலவரம் மற்றும் இதனை தீர்க்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகள், ராணுவ நிலைப்பாடு ஆகியவற்றை பற்றி விளக்கியதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இந்தியா எதற்கும் தயாராக உள்ளது என்பது தெளிவாகிறது.
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஜப்பானிய தூதர் சதோஷி சுஸூகி ஆலோசனை கூட்டம் நல்லபடியாக நடைபெற்றதாகவும், சீனாவின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள் ஏற்புடையதாக இல்லை எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.