இந்தியாவை சாபஹார் ரயில்வே திட்டத்தில் இருந்து விலக்கவில்லை: ஈரான் !!

ஈரானிய அரசு இந்தியாவை சாபஹார் ரயில்வே திட்டத்தில் இருந்து வெளியேற்றியதாக ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியை மறுத்துள்ளது.

அதாவது இந்தியா மற்றும் ஈரான் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ளவே இல்லை என ஈரானிய துறைமுகங்கள் துறை அதிகாரியா ஃபர்ஹாத் மான்டெஸார் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் சாபஹார் துறைமுக திட்டத்தில் எவ்வித சிக்கலும் இல்லை எனவும், அமெரிக்க தடைகள் இந்திய ஈரான் நட்புறவை பாதிக்காது எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சாபஹார் துறைமுக திட்டத்திற்கு சிறப்பு விலக்கை அளித்தது குறிப்பிடத்தக்கது.