எல்லையில் இந்திய கிராம மக்கள் மீது நடத்தும் தாக்குதல் : பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் !!

நேற்று முன்தினம் ஜம்மு காஷ்மீரில் எல்லையோர பகுதிகளில் வாழும் கிராம மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது, இதில் ஒரு குழந்தை உட்பட மூவர் மரணம் அடைந்தனர்.

இதனையடுத்து நேற்று இந்திய அரசு பாகிஸ்தான் தூதரை வரவழைத்து கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரை மட்டுமே 21 இந்தியர்கள் இத்தகைய தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர் மேலும் 94பேர் காயமடைந்துள்ளனர். 2711 முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் கையெழுத்து இடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து பாகிஸ்தான் செயல்பட வேண்டும் எனவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.