சீனா பின்வாங்க மறுப்பதால் தொடரும் எல்லை பிரச்சினை !!

  • Tamil Defense
  • July 23, 2020
  • Comments Off on சீனா பின்வாங்க மறுப்பதால் தொடரும் எல்லை பிரச்சினை !!

இந்தியா உலகம் முழுவதும் தனக்கு ஆதரவை வலுப்படுத்தி வரும் நிலையில் சீனா பாங்காங் ஸோ ஏரி அருகே உள்ள ஃபிங்கர்4 பகுதியில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளது.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளின் போது சீனா இந்திய கோரிக்கைகளை ஏற்பதாக கிட்டி கொண்டாலும் கடைசியில் தனது நரி தந்திர புத்தியை காட்டியுள்ளது, தற்போதைய நிலையில் சுமார் 40,000 படையினரை சீனா குவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து இந்திய ராணுவமும் மிக நீண்ட காலத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறது, ஏராளமான படை வீரர்களை எல்லை பகுதிகளுக்கு நகர்த்தி உள்ளது.

மேலும் பனிக்கால சூழல்களுக்கும் தயாராகி வருகிறது, அத்தகைய காலகட்டத்தில் லடாக்கில் -50 டிகிரி வரை குளிர் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சூழல்களில் செயல்பட இந்திய ராணுவம் தனது படையகனரை தயார்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.