14 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை…! என்ன முடிவு எடுக்கப்பட்டது?

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on 14 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை…! என்ன முடிவு எடுக்கப்பட்டது?

எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 14 மணி நேரம் நடைபெற்றுள்ளது.காலை 11.30 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை நடைபெற்றுள்ளது.

கிழக்கு லடாக் பகுதியின் சூசுல் பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.கல்வானில் நடைபெற்ற தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளும் பதற்றத்தை குறைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த திங்கள் அன்று சீனப்படைகள் பிங்கர் நான்கு பகுதியில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பேச்சவார்த்தைகளையும் தாண்டி இரு நாடுகளும் எல்லைப் புறத்தில் இருந்து பின்வாங்குவது என முடிவெடுத்துள்ளனர்.

கடந்த ஜீலை 6 அன்று ரோந்து பாயிண்ட் 14ல் இருந்து சீன டென்டுகளை பிரித்து 1கிமீ தொலைவு பின்வாங்கின.கல்வான் மற்றும் ஹாட் ஸ்பிரிங் பகுதியில் சீன வாகனங்கள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.