இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் ஒட்டுமொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வழங்க முடியும் : பில் கேட்ஸ் !!

  • Tamil Defense
  • July 18, 2020
  • Comments Off on இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் ஒட்டுமொத்த உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்தை தயாரித்து வழங்க முடியும் : பில் கேட்ஸ் !!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் சமீபத்தில் டிஸ்கவரி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி “கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போர்” எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார், இது டிஸ்கவரி ப்ளஸ் சேனலில் ஜூலை 16 அன்று ஒளிபரப்பு ஆகிறது.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியா தனது மிகப்பெரிய அடர்த்தி நிறைந்த மக்கள் தொகை காரணமாக மருத்துவ சுகாதார சிக்கல்களை கொண்டுள்ளது.

அதே நேரத்தில் இந்திய மருந்து நிறுவனங்கள் மிகவும் ஆற்றல் வாயந்தவை தங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகிற்கே அவர்களால் கொரோனா மருந்துகளை தயாரித்து வழங்க முடியும்.

உங்களுக்கு தெரியுமா உலகின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன, அவற்றில் முதன்மையானது செரம் இன்ஸ்டிடியூட்.

மேலும் பயோ இ, பாரத் பயோடெக் போன்ற பல முன்னனி நிறுவனங்கள் அங்கு உள்ளன. அவர்கள் கொரோனாவை ஒழிக்க மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்றார்.

மேலும் இந்தியாவில் அடிக்கடி பல மருந்துகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அவை சர்வதேச அளவில் பல நோய்களை குணப்படுத்த பயன்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பாரத தேசத்தின் புகழ் மேலும் ஓங்கட்டும் , ஜெய்ஹிந்த் !!