நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது
1 min read

நீர்மூழ்கி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தியா-ஆறு பொசைடான் விமானங்கள் வாங்குகிறது

அமெரிக்காவிடம் இருந்து மேலதிக ஆறு பொசைடான் விமானங்கள் வாங்கும் நடைமுறையை இந்தியா தொடங்கியுள்ளது.இது தவிர ஆறு பிரிடேடர் பி ட்ரோன்கள் வாங்கும் நடைமுறையும் துரிதப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பொசைடான் விமானங்கள் லடாக்கில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.சிறந்த எலக்ட்ரோ ஆப்டிக் சென்சார்கள் மற்றும் ராடார்களுடன் கண்காணிப்பு பணிகளில் ஆகச் சிறந்து விளங்குகின்றன இந்த பொசைடான் விமானங்கள்.

ஹார்பூன் பிளாக்-2 ஏவுகணைகள் மற்றும் MK-54 இலகுரக டோர்பிடோக்கள் கொண்டு எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து வருகிறது.

ஜனவரி 2009ல் மேற்கொண்ட $2.1 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் படி எட்டு விமானங்கள் தற்போது படையில் செயல்பட்டு வருகின்றன.2016 ஜீலை மாதம் மேற்கொண்ட 1.1 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் படி மேலதிக நான்கு விமானங்கள் பெறப்பட உள்ளது.இந்த டிசம்பர் முதல் இந்த விமானங்களுக்கான டெலிவரி தொடங்கும்.

தற்போது சுமார் 1.8 பில்லியன் டாலர்கள் செலவில் மேலதிக ஆறு விமானங்கள் வாங்கப்பட உள்ளன.இதற்கான ஒப்பந்தம் அடுத்த வருட தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர அவசரமாக ஆறு பிரிடேடர் பி தாக்கும் ட்ரோன்கள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.