அதிரடி முடிவு எடுத்த இந்தியா;கண்காணிப்புக்காக பில்லியன் டாலர்களில் தளவாடங்கள்

  • Tamil Defense
  • July 13, 2020
  • Comments Off on அதிரடி முடிவு எடுத்த இந்தியா;கண்காணிப்புக்காக பில்லியன் டாலர்களில் தளவாடங்கள்

இந்தியா தனது வான் மற்றும் கடலோர கண்கானிப்பை அதிகப்படுத்தும் பொருட்டு அமெரிக்காவிடம் இருந்து 30 MQ-9 ட்ரோன்களை வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படைக்காக இந்த ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.சுமார் $3 பில்லியன் டாலர்கள் செலவில் இந்த ட்ரோன்களை பெற மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

MQ-9 ட்ரோன்கள் இரு ரகங்களில் பெறப்பட உள்ளது. கடற்படைக்காக MQ-9B Sea Guardian ரகம் பெறப்பட உள்ளது.இது இந்தியாவின் நீண்ட நெடிய கடலோர பகுதிகளை கண்காணிக்க கடற்படைக்கு உதவும்.

அதே போல விமானப்படைக்காக MQ-9A Reaper ரகம் பெறப்பட உள்ளது.
இந்த ட்ரோன்களை படையில் இணைப்பது கண்டிப்பாக படைகளுக்கு சக்தியை அளிக்கும்.