
இந்திய விமானப்படைக்கு மேலதிகமாக 36 அல்லது சுமார் 114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க இந்திய அரசு பரிசிலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எத்தனை ரஃபேல் விமானங்கள் வாங்கப்படும் என தெரியவில்லை ஆனால் நிச்சயமாக கூடுதல் போர் விமானங்கள் வாங்கப்படும் என தெரிகிறது.
தற்போதைய நிலையில் இந்தியா இரண்டு ஸ்க்வாட்ரன்களுக்கான (36 விமானங்கள்) ரஃபேல் போர் விமானங்களை வாங்கி உள்ளது.
முதல் ஸ்க்வாட்ரன் ஹரியானா மாநிலம் அம்பாலாவிலும், இரண்டாவது ஸ்க்வாட்ரன் மேற்கு வங்க மாநிலம் ஹஸிமாரா தளத்தில் இருந்தும் செயல்படும் என்பது கூடுதல் தகவல்.